கரூர் கூட்ட நெரிசல்: 51 பேர் டிஸ்சார்ஜ்


கரூர் கூட்ட நெரிசல்: 51 பேர் டிஸ்சார்ஜ்
x

கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கரூர்,

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், கரூரில் விஜய் பரப்புரையின்போது நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 பேரில் 51 பேர் பூரண குணடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எஞ்சிய 59 பேரில் 51 பேருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story