நீண்ட நாட்களாக சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாட்களில் ஏலம் - சென்னை மாநகராட்சி


நீண்ட நாட்களாக சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாட்களில் ஏலம் - சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 13 Aug 2025 9:22 PM IST (Updated: 13 Aug 2025 9:47 PM IST)
t-max-icont-min-icon

15 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் 525 வாகனங்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்/மண்டல அலுவலகம்/காவல் நிலையத்தை 15 நாட்களுக்குள் அணுக வேண்டும். அவ்வாறு 15 நாட்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story