தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது


தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
x

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) யேசுராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் நேற்று (18.6.2025) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன்(எ) டியோமுருகன் (வயத 27), ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜா(எ) கோபி(23) மற்றும் பூபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சடைமாரியப்பன்(23) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்தம் 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story