மெட்ரோ ரெயிலில் பிச்சை எடுத்த நபருக்கு ரூ.500 அபராதம்


மெட்ரோ ரெயிலில் பிச்சை எடுத்த நபருக்கு ரூ.500 அபராதம்
x
தினத்தந்தி 15 Oct 2025 5:37 AM IST (Updated: 15 Oct 2025 2:34 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

பெங்களூரு,

மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் பிச்சைக்காரர்கள் அழுக்கு உடையில் செல்ல முடியாது என்பதால் ஒரு பிச்சைக்காரர் டிப்-டாப் உடையில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து, மெட்ரோ ரெயிலில் பயணித்து பயணிகளிடம் யாசகம் பெற்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

ஆம், டிப்-டாப் உடையில் பயணி போல் மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து யஷ்வந்தபுரத்துக்கு செல்ல டிக்கெட் எடுத்த அந்த நபர், ரெயில் ஏறி பயணத்தை தொடங்கியதும் பயணிகளிடம் பிச்சை கேட்டு யாசகம் பெற்றார். ‘நான் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி, எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கூறி துண்டு சீட்டை பயணிகளிடம் கொடுத்து, அதன்மூலம் அவர் யாசகம் பெற்றார்.

இதைக்கண்ட மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் அவரை பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர். இதற்கிடையே இதை மெட்ரோ ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

1 More update

Next Story