அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை - அதிமுக ஐ.டி. பிரிவு


அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை - அதிமுக ஐ.டி. பிரிவு
x
தினத்தந்தி 20 May 2025 8:49 PM IST (Updated: 20 May 2025 9:12 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சியான அதிமுகவை எதிர்ப்பதற்கு காரணம் இல்லை என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசியல் எதிரி திமுகவுடனும், கொள்கை எதிரி பாஜகவுடனும் கூட்டணி இல்லை. பாஜக. உடன் இருப்பதால் அதிமுகவுடனும் தவெக கூட்டணி அமைக்காது. விஜய்யின் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் நாங்கள் தெரிவிக்கிறோம். அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியை எதிர்ப்பதற்கு காரணம் இல்லை. அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி., பல தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? தவெகவின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதே எங்களின் நிலைபாடு என்று கூறினார்.

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஐ.டி. பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- "தொழிலதிபராக இருந்து, "திடீர்" அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுகவை பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை. இன்று தவெகவில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் ஆதவ் அர்ஜுனா, நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story