3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி இணைப்பு

3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.17652), வரும் டிசம்பர் 6-ந்தேதி முதலும், செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17651), வரும் டிசம்பர் 8-ந்தேதி முதலும் ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது.
காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் (17644), மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு காக்கிநாடா துறைமுகம் செல்லும் சா்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் (17643) வரும் டிசம்பர் 7-ந்தேதி முதல் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு மாற்றாக 3-வது வகுப்பு ஏ.சி.பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது.
பெங்களூருவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17235), வரும் டிசம்பர் 4-ந்தேதி முதலும், மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17236) வரும் டிசம்பர் 5-ந்தேதி முதலும் ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






