தூத்துக்குடியில் பக்தர்களின் பாதுகாப்புக்கு ஏஐ ஹைடெக் கட்டுப்பாட்டு அறை: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் நடந்த திருவிழாக்களின்போது பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக Copbot AI எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பில் ஹைடெக் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
இந்த ஹைடெக் கட்டுப்பாட்டு அறையில் பல்வேறு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்கான project Guardian எனும் செயலி மற்றும் நிகழ்நேர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்தை நேரடியாக கண்காணித்தல் (Real-time Traffic and Parking Monitoring), பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக Copbot AI எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
மேற்சொன்ன ஹைடெக் கட்டுப்பாட்டு அறை உருவாக்க உதவிய நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, பண்ணாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.






