மக்களின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு


மக்களின் தேவைகளை நிறைவேற்ற  வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2025 2:34 PM IST (Updated: 16 July 2025 5:40 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சியில், தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 50 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாத காரணத்தால் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள சாலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. கொசுக்கனை அழிப்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. வீட்டு வரி, பிறப்பு: இறப்புச் சான்றிதழ் தேவைப்படும் மக்கள் நகராட்சி நிர்வாகத்தை அணுகி முறையாகப் பெற முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் வீடு கட்டுவதற்கு சுட்டட அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதன் காரணமாக அப்பகுதிவாழ் மக்கள் மிருந்த மனவேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் நிலலி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் 21.7.2025 திங்கட் கிழமை காலை 10 மணியாவில், திருவேற்காடு நகரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் அரசையும் திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story