அதிமுக கிளை செயலாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்... சேலத்தில் பரபரப்பு


அதிமுக கிளை செயலாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்... சேலத்தில் பரபரப்பு
x

அதிமுக கிளை செயலாளர் பெயர் நீக்கப்பட்டு இறந்தவர் பட்டியலில் சேர்த்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் வெள்ளாளகுண்டம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 60), அ.தி.மு.க. கிளை செயலாளர். சமீபத்தில் தீவிர திருத்த முகாமையொட்டி கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இல்லை. இதையறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வெள்ளாளகுண்டம் பகுதியில் வாக்காளர்களில் இறந்தவர்கள் பட்டியலை பார்த்தபோது, பட்டியலில் 7-வது இடத்தில் இவரது பெயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் காந்தி கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கிளை செயலாளர் பெயர் நீக்கப்பட்டு இறந்தவர் பட்டியலில் சேர்த்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. கிளைச்செயலாளர் காந்தி கூறும் போது, ‘வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரியாக விசாரிக்காமல் எனது பெயரை நீக்கி உள்ளார். இதை நான் கண்டுபிடித்து தெரிவித்த பின்பு தற்போது மீண்டும் எனது பெயரை சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். என்னை போன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கவனமுடன் விசாரித்து பெயர் நீக்கும் பணியில் ஈடுபட வேண்டும்’ என்றார்.

1 More update

Next Story