சென்னையில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு


சென்னையில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
x

சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளில், ஆட்சியதிகாரம் கொண்டு தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் 20-ந்தேதி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story