தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க நடவடிக்கை; முதல்-அமைச்சருக்கு அமித்ஷா வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க நடவடிக்கை; முதல்-அமைச்சருக்கு அமித்ஷா வலியுறுத்தல்
x

தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை

மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ராஜாதித்யன் சோழன் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தொழிற்பாதுகாப்புப்படையினரின் அணிவகுப்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது,

மத்திய ஆயுத போலீஸ் படைக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற அணிகலன் ஆகும். அதை ஒட்டுமொத்த நாடும் பெருமையுடன் தழுவுகிக்கொள்கிறது.

இந்தியாவின் கலாசாரத்தை வலிமைப்படுத்துவதில் தமிழ்நாட்டின் கலாசாரம் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது

என்றார்.

1 More update

Next Story