அமலாக்கத்துறையின் அக்கப் போர்களுக்கு முடிவு - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை,
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
டாஸ்மாக் வழக்கு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்பை திமுக வரவேற்கிறது. அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை என்பது பிளாக்மெயில் அமைப்பை போல் செயல்படுகிறது. அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது என்றார்.
Related Tags :
Next Story