காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாமக யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் இரு தரப்பிலும் பல்வேறு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் தனது வலிமையை நிலைநாட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நடைபயணத்தின் ஒரு பகுதியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெல்லை சென்றுள்ளார். அவர் இன்று நெல்லையில் உள்ள உலகப்புகழ் பெற்ற காந்திமதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.






