வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு அண்ணாமலை வாழ்த்து

பல தலைமுறைகள் தாண்டி அவர் புகழ் நீடிக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியத் திரையுலகின் இலக்கணத்தை மாற்றி அமைத்து, தனது ஒப்பற்ற கலைத்திறனால், திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் தலைவர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால கலைச்சேவையைப் பாராட்டி, சர்வதேச திரைப்பட அமைப்பு, விருது வழங்கி கவுரவித்துள்ளது பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. மத்திய இணையமைச்சர் அண்ணன் எல்.முருகன் முன்னிலையில், கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இந்த விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்.
தனது ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரத்தாலும், உலகம் முழுவதும் உள்ள பல கோடி ரசிகர்கள் மத்தியில், அன்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மென்மேலும் பல விருதுகளும், அங்கீகாரங்களும் அவர் பெறவும், மேலும் பல தலைமுறைகள் தாண்டி அவர் புகழ் நீடிக்கவும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






