அரசியலில் மரியாதை, நாகரிகம் தெரியாதவர் அண்ணாமலை - அமைச்சர் கீதாஜீவன் தாக்கு

கோப்புப்படம்
அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த அண்ணாமலை வாய்க்கு வந்த கருத்துகளை கூறி வருகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த வாய்க்கு வந்த கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று கூட துணை முதல்-அமைச்சரை ஒருமையில் பேசி உள்ளார். அரசியலில் மரியாதை, நாகரிகம் தெரியாதவர், என்ன ஐ.பி.எஸ். படித்தார்? என்று தெரியவில்லை.
அந்த வகையில் தற்போது முதல்-அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் 'ஹேஷ்டேக்' பதிவு செய்துள்ளார். தனது கட்சியில் தான் முக்கியமானவர் என்பதை கட்சிக்காரர்களுக்கு காண்பிப்பதற்காக இதுபோன்ற செயல்களை அண்ணாமலை செய்கிறார். நிச்சயமாக அதெல்லாம் டிரெண்டிங் ஆகப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






