அண்ணாமலை குடும்பத்துடன் இலங்கை பயணம்

ஒரு வாரம் இலங்கையில் தங்கி இருக்கும் அண்ணாமலை வருகிற 1-ந்தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குடும்பத்தினருடன் நேற்று மாலை இலங்கை புறப்பட்டு சென்றார். ஒரு வாரம் அவர் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு தமிழர்கள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தசரா விழாவிலும் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு வாரம் இலங்கையில் தங்கி இருக்கும் அண்ணாமலை வருகிற 1-ந்தேதி சென்னை திரும்புகிறார்.
முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில்,
ஒவ்வொரு முறை நான் வரும் போதும் பேட்டி கேட்கிறீர்கள். நான் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
Related Tags :
Next Story






