திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி


திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி
x
தினத்தந்தி 21 May 2025 5:45 PM IST (Updated: 21 May 2025 5:48 PM IST)
t-max-icont-min-icon

அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம் என்று கூறி எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசார் உறுதிமொழி எடுத்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் "கொடுஞ்செயல் எதிர்ப்பு" உறுதிமொழி எடுத்து கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

1 More update

Next Story