தூத்துக்குடியில் டிரைவரை கொலை செய்ய முயற்சி: 6 பேர் கும்பல் கைது

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், டிரைவர் ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
தூத்துக்குடியில் டிரைவரை கொலை செய்ய முயற்சி: 6 பேர் கும்பல் கைது
Published on

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பவானிநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் சதீஷ் (வயது 26), டிரைவர். இவரிடம் தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் குணசேகரன்(எ) குணா கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி கேட்ட போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த 1ம்தேதி சதீஷ் புதுக்கோட்டை பவானிநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு 2 பைக்குகளில் குணசேகரன்(எ) குணா உட்பட 6 பேர் சதீஷை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால், 6 பேரும் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரன்(எ) குணா மற்றும், திரு.வி.க.நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுடலை(33), தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் மனோகரன்(24), திரு.வி.க.நகரை சேர்ந்த வாசுதேவன் மகன் பரத்விக்னேஷ்(எ) பரத்(29), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார்(25), அய்யனார் காலனியை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ்(23) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com