திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி - அமைச்சர் சேகர்பாபு


திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி -  அமைச்சர் சேகர்பாபு
x

இந்துக்களும் , இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

சென்னை,

சென்னையில் இன்று செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது,

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை.

போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள், அது தமிழகத்தில் நடக்காது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர். என தெரிவித்தார் .


Next Story