கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 16-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்


கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 16-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 15 Dec 2025 9:21 PM IST (Updated: 15 Dec 2025 9:57 PM IST)
t-max-icont-min-icon

என்ன காரணத்துக்காக இது போன்ற மிரட்டல் விடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியவில்லை.

கோயம்புத்தூர்,

கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இ-மெயில் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு சிக்கவில்லை. இதனால் அனு வெறும் புரளி என தெரியவந்தது.

கடந்த 5 மாதங்களில் 16-வது முறையாக இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டும் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். என்ன காரணத்துக்காக இது போன்ற மிரட்டல் விடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியவில்லை.

‘டார்க் நெட்' வாயிலாக மிரட்டல் விடுப்பதால், ஐ.டி.யை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதாகவும், மர்ம நபர்களை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story