சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையை அடுத்த செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு, திருமழிசையில் உள்ள 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயிலில் வந்த மிரட்டலை அடுத்து ஆவடி காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரிகள் பள்ளிகளுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இமெயிலில் மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story






