நானும் டிடிவி தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் தினம் ஒரு போராட்டம் நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எங்கள் கூட்டணி வலிமையான வெற்றிக் கூட்டணி. தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சொல்வோம். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும். நானும் டிடிவி தினகரனும் அம்மா (ஜெயலலிதா) வளர்த்த பிள்ளைகள். அம்மா விட்டுச்சென்ற பணியை தொடர உள்ளோம்.
எங்களுக்கு மனகசப்புகள் இருந்தன; அவை அனைத்தையும் மறந்து ஒன்றாக பயணிக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை; இருவரும் ஒன்றாக பயணிப்போம், பரப்புரை செய்வோம் தமிழகத்தில் உள்ள குடும்ப ஆட்சி; ஊழல் ஆட்சி அகற்ற வேண்டும் என்று இணைந்து பயணிக்கிறோம். திமுக ஆட்சியில் தினம் ஒரு போராட்டம் நடைபெற்று வரும் அளவுக்கு சீர்கெட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமமுக பொதுசெயலாளர் தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக விவகாரம் எங்கள் குடும்ப பிரச்சினை. எங்களுக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கிவிட்டது. எங்களுக்கு எந்த சங்கடமும் கிடையாது; மன வருத்தமும் கிடையாது. 2021-ல் நடக்காத அமித்ஷாவின் முயற்சி 2026-ல் நடந்துள்ளது. 2017-ல் எடப்பாடி பழனிசாமியும் நானும் அண்ணன் தம்பிகளாக இருந்தது போல இப்போது இருந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.






