சென்னை: சாலையில் கார் கவிழ்ந்து விபத்து


சென்னை: சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
x

விபத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

சென்னை

சென்னையில் அடையார் சிக்னல் அருகே உள்ள சாலையில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தனது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு கம்பி மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story