முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு


முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை,

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஐகோர்ட்டு நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story