வைஷ்ணவ தேவி கத்ரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


வைஷ்ணவ தேவி கத்ரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
x

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ராவில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16318) அடுத்த மாதம் 23-ந் தேதி மற்றும் மார்ச் 2-ந் தேதியில் சகுர்பஸ்தி, பட்டேல் நகர், ஓக்லா வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் நிற்காது.

அதே போல, ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ராவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16032) வருகிற 24 மற்றும் அடுத்த மாதம் 28-ந் தேதியில் சகுர்பஸ்தி, பட்டேல் நகர், ஓக்லா வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயிலும் புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் நிற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story