பெரம்பலூரில் பட்டியலின மக்களின் தெருவில் தேர் செல்லவேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


பெரம்பலூரில் பட்டியலின மக்களின் தெருவில் தேர் செல்லவேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

தேர் செல்ல தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீவேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் வருவதை உறுதி செய்ய மாவட்ட கலெக்டர், எஸ்.பிக்கு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா? சாலையின் அகலம், தேரின் நீள, அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட தெருக்களில், எந்த இடையூறும் இல்லாமல் தேர் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதி, கோவிலில் திருவிழா நடக்கும் போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியே தேர் செல்ல வேண்டும் எனவும், அதற்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story