சென்னை: இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக் செய்ததால் 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞரை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இடையே சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால், மாணவியை இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக் செய்துள்ளான். இதனால், விரக்தியடைந்த கல்லூரி மாணவி இன்று சேப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், மாணவி படுகாயமடைந்தார். உடனடியாக மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






