சென்னை: பஸ்சுக்காக காத்திருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை


சென்னை: பஸ்சுக்காக காத்திருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை
x
தினத்தந்தி 11 Dec 2025 11:56 PM IST (Updated: 11 Dec 2025 11:57 PM IST)
t-max-icont-min-icon

புகார் அளித்த 2 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

சென்னை,

சென்னை மூலக்கடையை சேர்ந்த 15 வயது சிறுமி, இன்று புழல் கேம்ப் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதற்காக புழல் கேம்ப் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரிைய சிறுமியின் அருகில் நிறுத்திய டிரைவர், தான் மூலக்கடைக்குதான் லாரியை ஓட்டிச்செல்வதாகவும், லாரியில் ஏறினால் கொண்டு சென்று விடுவதாகவும் கூறினார். அதனை நம்பிய சிறுமி, லாரியில் ஏறினார். லாரி சிறிது தூரம் சென்றவுடன் சாலை ஓரம் நிறுத்திய டிரைவர், சிறுமியை லாரியில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. டிரைவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து புழல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுபற்றி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து லாரி பதிவு எண்ணை வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சிவராமன்(வயது 35) என்பது தெரியவந்தது. இதுபற்றி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர். புகார் அளித்த 2 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

1 More update

Next Story