கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு விதித்த சென்னை ஐகோர்ட்டு


கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு விதித்த சென்னை ஐகோர்ட்டு
x

சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது

சென்னை

கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள், 11 கால்வாய்களி ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2018ம் ஆண்டு கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், ஐகோர்ட்டு உத்தரவு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட்டு கும்பகோணத்தில் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, 4 மாதங்கள் கெடு விதித்தது. ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்ற தவறினால் கும்பகோணம் மாநகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

1 More update

Next Story