சென்னை: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

சென்னையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பெண்கள் தங்களது நகைகளை பறிகொடுத்துள்ளனர்.
சென்னை,
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ருக்மணி (வயது 62). இவர், சென்டிரலில் இருந்து மாநகர பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் ருக்மணி அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றுவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் வியாசர்பாடி ஜே.ஜே.ஆர்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சாந்தா (60). இவர், எருக்கஞ்சேரியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டு மாநகர பஸ்சில் வியாசர்பாடி வந்தார். அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த 3½ பவுன் நகையை யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






