தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல்


தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல்
x

தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீன துறைமுகமான நிங்பேவில் இருந்து கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட கப்பல் வந்தது. அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வந்த 2 கன்டெய்னர்களில் என்ஜினீயரிங் உபகரணங்கள், சிறிய தட்டையான டிராலிகள் இருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அந்த கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அந்த கன்டெய்னர்களில் சிலிக்கன் சீலென்ட்கன் எனப்படும் தகரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் ஒட்டுவதற்கு பயன்படும் உபகரணங்களும், அதற்கான சிலிக்கான் பசை போன்ற பொருட்களும் இருந்தன.

மேலும் அவற்றுக்கு பின்னே 8,400 அட்டைப் பெட்டிகளில் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். கன்டெய்னர்களில் இருந்த பொருட்களுடன் சீன பட்டாசுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொழில் அதிபர்கள் சிலர் என்ஜினீயரிங் பொருட்கள் பெயரில் ஆவணம் தயாரித்து, சீன பட்டாசுகளை கன்டெய்னர்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

1 More update

Next Story