நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் - அண்ணாமலை


நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் - அண்ணாமலை
x

முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story