‘மோன்தா’ புயல் ஆந்திராவை நோக்கிச் செல்லும் என தகவல்


‘மோன்தா’ புயல் ஆந்திராவை நோக்கிச் செல்லும் என தகவல்
x

புயலால் பிற மாவட்டங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் கூறியுள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழு மண்டலாம வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வருகிற 26-ம் தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. மறுநாள் 27-ம் தேதி காலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.வருகிற 27-ம் தேதி புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு தாய்லாந்து பரிந்துரைத்த ‘மோன்தா’என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், புயல் ஆந்திராவை நோக்கிச் செல்லும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலால் பிற மாவட்டங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை வடகடலோர மாவட்டங்களுக்கு மழை வருமா இல்லையா என்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவரும். நவம்பர் முதல் வாரத்தில் பருவமழை தொய்வடையும் என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story