'கவர்னரின் பேச்சால் தலித் மக்கள் ஏமாறமாட்டார்கள்' - திருமாவளவன்


கவர்னரின் பேச்சால் தலித் மக்கள் ஏமாறமாட்டார்கள் - திருமாவளவன்
x

கவர்னரின் பேச்சால் தலித் மக்கள் ஏமாறமாட்டார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும், மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். கவர்னர் என்ற பொறுப்பை மறந்து அவர் பேசுவதும், செயல்படுவதும் தொடர்ந்து நீடிக்கிறது.

தலித்துகளை வலதுசாரிகளின் பக்கம் கவர்வதற்காக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் தரப்பிற்கு ஈர்ப்பதற்காக அடிக்கடி அவர் தலித்துகளை பற்றியும் பேசுகிறார். தலித் ஒருவர் முதல்-அமைச்சராக வேண்டும் என்பது அப்பாவி தலித்துகளை வளைத்துப் போடுவதற்கான ஒரு சூழ்ச்சி. கவர்னரின் பேச்சால் ஒருபோதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித்துகள் ஏமாறமாட்டார்கள்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

1 More update

Next Story