அமித்ஷாவிடம் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் கொடுத்தேனா? நயினார் நாகேந்திரன் விளக்கம்

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் எதையும் கொடுக்கவில்லை. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சு தொடங்கவில்லை. மரியாதை நிமித்தமாக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தேன். தமிழகத்திற்கு வர அமித்ஷாவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன். எனது யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் நிகழும். ஆனால், கூட்டணி அதிமுகவுடன் தான்” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






