திண்டுக்கல்: 24 மணி நேரமும் விற்பனை; மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்த பெண்கள்


திண்டுக்கல்:  24 மணி நேரமும் விற்பனை; மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்த பெண்கள்
x

ஆத்திரமடைந்த பெண்கள், மதுபாட்டில்களை சாக்கு பையில் எடுத்து வந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோம்பைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் புகார் அளித்தும் அதுபற்றி போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மதுபாட்டில்களை சாக்கு பையில் எடுத்து வந்தனர். அதனை எடுத்து அவர்கள் சாலையில் போட்டு உடைத்தனர்.

1 More update

Next Story