தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி தாக்கு


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி தாக்கு
x

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படுமெனெ எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, வானூர் அருகே திருச்சிற்றம்பலம் நான்கு முனை சந்திப்பில் மக்கள் மத்தியில் பேசியதாவது;

தேர்தல் வாக்குறுதியான 524 வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக

இந்தியாவிலேயே கல்விக்கு முக்கியத்துவம் தந்தது அதிமுகதான். கல்விக்கு முக்கியத்துவம் தராதது திமுக. கல்விக்கடன் ரத்து என்றார்கள். அதையும் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள். அதையும் செய்யவில்லை. விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக அதிமுக இருந்தது. அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசயைகளை ஓடோடி வந்து பார்த்தோம். ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை

அதிமுக கொடுத்த அழுத்தத்தால் ஆட்சிக்கு வந்து 25 மாதங்களுக்கு பிறகுதான் மகளிர் உரிமைத்தொகை வழங்கினார்கள். தேர்தல் வரை மட்டுமே மகளிர் உரிமைத்தொகையை தருவார்கள். திமுகவின் ரூ.1,000 உரிமைத்தொகையை நம்பி நாங்கள் தரவிருந்த ரூ.1,500-ஐ தவறவிட்டீர்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story