2026 தேர்தலில் 200 இடங்களில் திமுக வெல்ல உழைக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சேலம்,
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;
"2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் தான் உள்ளன. இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் செமி பைனல், 2026 சட்டமன்ற தேர்தல் தான் பைனல் கேம். அதில் நாம் ஜெயிக்க வேண்டும். 234 தொகுதிகளில் 200-ல் திமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். 200 என்பது டார்கெட், இளைஞர் அணியினர் 200-ஐ தாண்டி திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும்." என்றார்.
Related Tags :
Next Story