கரூரில் திமுக முப்பெரும் விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


கரூரில் திமுக முப்பெரும் விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
x

கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது

கரூர்

திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு திமுக முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புறை ஆற்றுகிறார்.

திமுக முப்பெரும் விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

1 More update

Next Story