2026 தேர்தலிலும் திமுக வெற்றி தொடரும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
கரூர்
கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
2019 முதல் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். சாதாரண வெற்றி அல்ல, எதிரணியை கலங்கடிக்கும் வெற்றி. 2026 தேர்தலிலும் திமுக வெற்றி தொடரும், திராவிட மாடல் 2.0 ஆட்சி ஆமையும்.
இது பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் செதுக்கிய தமிழ்நாடு. இங்கு அடக்குமுறைக்கு, ஆதிக்கத்திற்கு, திணிப்பிற்கு அனுமதியில்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அனுமதியில்லை.
அண்ணாயிசமாக இருந்த அதிமுகவின் கொள்கை, அடிமையிசமாக மாறி, அமித்ஷாவே சரணம் என எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகிவிட்டார்
இவ்வாறு அவர் கூறினார்
Related Tags :
Next Story






