திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி


திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி
x

தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக கூட்டணி உடைந்து விடும் என பல ஆண்டுகளாக அ.தி.மு.க.வினர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்துதான் ஒவ்வொருவராக உருவி வந்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் முடிந்ததும், அங்கிருந்து மேலும் சிலர் திமுகவுக்கு வந்து விடுவார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 8 முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தார். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். தற்போது 10 முறை மோடி தமிழகத்துக்கு வந்தால் 234 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story