எஸ்.ராமகிருஷ்ணனுக்கு "பாரதிய பாஷா" விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

"பாரதிய பாஷா" இலக்கிய விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
"பாரதிய பாஷா" இலக்கிய விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
ஆழமிகு சிந்தனைகளோடு வாழ்வியலைப் பிரதிபலிக்கும் நற்றமிழ்ப் படைப்புகளால் தமிழ் இலக்கிய உலகின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழும் "எஸ்.ரா" அவர்களின் மணிமகுடத்தில் மற்றுமொரு நன்முத்தாக இவ்விருது திகழட்டும்!.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






