பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 26 July 2025 10:50 PM IST (Updated: 27 July 2025 7:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

திருச்சி,

மாலத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து நேராக தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமைந்த நிலையில், பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்ததாக சொல்லப்படுகிறது.

1 More update

Next Story