சுற்றுப்பயணத்தில் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி தினமும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்


சுற்றுப்பயணத்தில் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி தினமும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்
x
தினத்தந்தி 3 July 2025 5:30 AM IST (Updated: 3 July 2025 5:30 AM IST)
t-max-icont-min-icon

23-ந் தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை. ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்கிறார். அதற்காக அவரது முதல்கட்டமாக சுற்றுப்பயணம் விவரம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் தினமும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார். அவர் வருகிற 7-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சட்டமன்ற வாரியாக செல்லும் இடங்கள் குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

7-ந் தேதி மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம். 8-ந் தேதி கோவை வடக்கு, கோவை தெற்கு. 10-ந் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், 11-ந் தேதி வானூர், மயிலம், செஞ்சி, 12-ந் தேதி கடலூர், பண்ருட்டி, நெய்வேலி. 14-ந் தேதி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி. 15-ந் தேதி குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம். 16-ந் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில். 17-ந் தேதி சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை. 18-ந் தேதி நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர். 19-ந் தேதி நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி. 21-ந் தேதி மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம். 22-ந் தேதி பாபநாசம், தஞ்சை, திருவையாறு. 23-ந் தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை. ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story