ஈபிஎஸ் ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை - செங்கோட்டையன்


ஈபிஎஸ் ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை - செங்கோட்டையன்
x
தினத்தந்தி 1 Dec 2025 7:27 PM IST (Updated: 1 Dec 2025 7:31 PM IST)
t-max-icont-min-icon

கோபி செட்டிபாளையத்தில் ஈபிஎஸ் கூட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆட்சியில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இல்லை. தான் யாருக்கும் காலக்கெடு விதிக்கவில்லை, அனைவரையும் ஒன்றிணைக்க பேச்சுவாத்தைதான் நடத்தினேன். 5-ம் தேதிக்கு முன்பு வரை ஓபிஎஸ் டிடிவி தினகரனிடம் நான் பேசவில்லை. ஈபிஎஸ் பொய் சொல்கிறார். தன்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான் ஈபிஎஸ்சின் ஆசை. அதை ஏதோ ஒரு காரணம் கூறி செய்துவிட்டார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி என்னை வெளியே அனுப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை என்னுடைய பயணங்கள் சரியாக இருக்கும். கோபிசெட்டிபாளையத்தில் ஈபிஎஸ்க்கு கூடியது கூட்டப்பட்ட கூட்டம். ஈபிஎஸ் கூட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். 2021ல் மக்கள் வழங்கிய தீர்ப்பே எடப்பாடி பழனிசாமிக்கான பதிலாக இருக்கும்.

யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை. ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது. தெளிவாக முடிவெடுத்து தவெகவில் இணைந்துள்ளேன். அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு செங்கோட்டையன் பதில் அளித்தார்.

1 More update

Next Story