வருவோர், போவோர் எல்லாம் இன்று தலைவர் ஆகி விடுகிறார்கள்: அண்ணாமலை பேச்சு


வருவோர், போவோர் எல்லாம் இன்று தலைவர் ஆகி விடுகிறார்கள்: அண்ணாமலை பேச்சு
x

பழி வாங்கும் போக்கு அரசியல் வாதிக்கு இருக்கலாம் ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள சுத்தானந்தா ஆசிரமத்தில் அரசியல், ஆளுமை, தலைமைத்துவம் குறித்த பயிலரங்கில் பாரதீயஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டார், அப்போது அவர் பேசியதாவது:-

அரசியலில் எந்த பதவியும் ஒரு நாள் இல்லாமல் போவது இயல்பு தான். நாம் சும்மா இருந்தாலும் நமக்கு அடைமொழி கொடுத்து போஸ்டர் அடித்து விடுகின்றனர். இன்று வருவோர், போவோர் எல்லாம் தலைவர் ஆகி விடுகின்றனர். வெள்ளை சட்டை போட்டு நான்கு ரீல்ஸ் போட்டால் தலைவர் ஆகி விடுகிறார்கள்.

மாடுகளுக்கு வாக்குரிமை வேண்டும் என்று ஒரு அரசியல் கட்சித்தலைவர் கூறியதை நான் சரி, தவறு என்று கூறவில்லை. பழி வாங்கும் போக்கு அரசியல் வாதிக்கு இருக்கலாம் ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது. அதிகாரத்துக்கு வந்தாலும் செல்போனை ஒட்டுக்கேட்பது , பழி வாங்கு வது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. 40 சதவீத வாக்காளர்கள் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு தான் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பதை முடிவு செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story