பானிபூரி கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கட்டாயம்

உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை
தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறை விதியின் படி உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். அதன்படி பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமத்தை கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
தள்ளுவண்டி உரிமையாளர்கள் ஆன்லைன் மூலமாகமும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் இலவசமாக உணவு உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம். உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Tags :
Next Story






