அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. திமுகவில் இணைந்தார்...!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்று திமுகவில் இணைந்துள்ளார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் , அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான சின்னசாமி இன்று திமுகவில் இணைந்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற சின்னசாமி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தனர்.






