அதிமுக பொறுப்பில் இருந்து முன்னாள் எம்.பி. சத்யபாமா நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளரும் முன்னாள் எம்.பி,யுமான சத்தியபாமாவின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்தார். இந்தநிலையில், முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் பதவியை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக தலைமைச்செயற்குழு பொறுப்பில் இருந்து முன்னாள் எம்.பி. சத்தியபாமா நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளரான சத்தியபாமாவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
சத்தியபாமா திருப்பூர் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி ஆவார். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் சீட் கொடுத்திருந்தார். அப்போது 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு தேர்தல் அரசியலில் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.






