கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வேண்டும் - விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்


கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வேண்டும் - விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x

விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக்நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் பேசியதாவது:-

"கவர்னரின் அதிகாரத்தை வரையறுத்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள கவர்னர் மீதும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. ரிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தாமே முன்வந்து சுப்ரீம் கோர்ட்டு மேற்கொள்ள வேண்டும்.'

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story